உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி

26 0

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது.

குறித்த நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.