நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

49 0

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாடுகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று இடம்பெறவிருந்த நிலையில் இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கை அணியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த தொடரை திட்டமிட்டவாறு முழுமையாக விளையாடி நிறைவு செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய இன்றைய தினம் இலங்கை அணி வீரர்கள் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.