மட்டக்களப்பு – கிரான், கருங்காளியடி பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டர் குண்டு ஒன்றை கடந்த 12ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாம்; தற்போது காணி உரிமையாளர்களிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மெகா கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டுவருகிறது.
குறித்த நடவடிக்கைகளின்போதே, மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் குண்டை மீட்டு, அதனை அழிப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

