அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார்.

