யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனுக்கு கடந்த 7ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

