அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

37 0

DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார்.

இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது.

ஜேம்ஸ் வாட்சன்  தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க புலமைப்பரிசில் பெற்றார்.

DNA கட்டமைப்பு குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர ஜேம்ஸ் வாட்சன்  கேம்பிரிட்ஜுக்குச் சென்றார், அங்கு அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக்கை சந்தித்து தனது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.