6 வருடங்களாக மலசலகழிவுகளை அகற்றும் வாகனம் இல்லை

29 0

அட்டன் –டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மலசலகூட கழிவுகளை அகற்றுவதற்கான வாகனம் (கலி வாகனம்)  கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் பழுதடைந்திருப்பதால் கழிவுகளை அகற்றுவதில் தாம் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நகரசபைக்கு சொந்தமான வாகனம் பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக நகர குடியிருப்பாளர்கள் தலவாக்கலை –லிந்துலை நகரசபைக்கு சொந்தமான  மலசல கூட கழிவகற்றும் வாகனத்தையே அதிக பணம் செலுத்தி பாவித்து வருவதாகவும் தூரத்தை அடிப்படையாகக்கொண்டு தாம் அதற்கு கூடுதல் பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை மேற்படி வாகனமானது தற்போது பாவிக்க முடியாத நிலைமைகளில் இருப்பதால் அதை திருத்தம் செய்வதற்கான கொடுப்பனவுகளை வழங்குவது நகரசபை நிதியை வீணடிக்கும் செயல் என  சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கின்றார். புதிய கலி வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும் ஆனால் கழிவு நீரை கொட்டுவதற்கு எங்கும் இடமில்லை. ஆகவே அதன் காரணமாக இந்த விவகாரம் இழுபறியாகிக்கொண்டிருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.