இந்தியா, தெலங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒரு குழந்தையின் தாய், தனது 3 வயது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், சுத்தம் செய்த பிறகு அவளை அழைத்துச் செல்ல வருவேன் என்றும் தனது குழந்தையிடம் கூறியிருந்தார்.
இருப்பினும், தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய கணவர், பிரதான கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அண்டை வீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்து திறந்தபோது, அவரது மனைவி மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன், அந்தப் பெண், “ஸ்ரீ, மன்னிக்கவும், இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. உங்கள் மகளை கவனித்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்” என்று எழுதி ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தார்.
சுத்தம் செய்யும் போது அவள் எறும்புகளைப் பார்த்திருக்கலாம் என்றும், அதன் விளைவாக எழுந்த பயம் காரணமாக அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.எறும்புகளைப் பற்றிய இந்த பயம் ஒரு மருத்துவ நிலை மற்றும் இது மைர்மெகோபோபியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எறும்புகளைப் பற்றிய தீவிர பயம் காரணமாக வெளியில் இருக்கக்கூட தயங்குவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட பெண் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இதற்கு சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

