சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் 309 கொல்கலன்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அதிகாரியை ஜனாதிபதி சுங்கத்தின் பணிப்பாளராக நியமித்துள்ளதுடன் தற்போது அவரது சேவை காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 309 கொள்கலன்கள் தொடர்பான விசாரணைை நடவடிக்கையை அரசாங்கம் தாமதித்து வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தாா்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சுங்கத்தில் இருந்து பரிசேதனை எதுவும் இல்லாமல் 309 கொல்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்து, விசாரணை அறிக்கையும் கையளிக்கப்பட்டு 4மாதம் ஆகின்றபோதும் இதுவரை அஅந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடவில்லை. அதனால் குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.
அதேநேரம் ஜனாதிபதி அமைத்த விசாரணை குழுவின் அறிக்கையில் சுங்க திணைக்களத்தின் அதிகாரிகள் பலருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போதைய பணிப்பாளருக்கு எதிராகவே பாரிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளாமல் ஜனாதிபதி இவருக்கு சுங்கத்தின் பணிப்பாளர் பதவி வழங்கி இருக்கிறார்.ஜனாதிபதி நியமித்த குழுவினாலே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை எப்படி பணிப்பாளராக நியமிக்க முடியும்? அது நியாயமா என கேட்கிறோம்.
குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்குவதாக இருந்தால், அவர் அரசாங்கத்துக்காக செயற்பட்டு, இந்த 309 கொல்கலன்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு பிரதி உபகாரமாகவே இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேநேரம் சுங்க பணிப்பாளரின் சேவை காலம் 4ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அந்த பதவிக்கு வருவதற்கு தகுதியான, திறமையான பலர் அங்கு இருக்கும் நிலையில், சுங்க பணிப்பாளரின் சேவை காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றைை சமர்ப்பிக்க இருப்பதாக எமக்கு அறியக்கிடைக்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியிவ் இருக்கும்போது, கடந்த அரசாங்க காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இவ்வாறான நடவடிக்கையால் திறமையான ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது என விமர்சித்து வந்ததுடன், தமது அரசாங்கத்தில் அரச ஊழியர்கள் அவர்களின் திறமைக்கேற்ப, அவர்களுக்குரிய இடம் வழங்கப்படும் என தெரிவித்து வந்தார்.
அத்துடன் அண்மையில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன, அந்த கொள்கலன்களை கொண்டுவந்தவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால சுங்கத்தில் இருந்து இந்த இரண்டு கொள்கலன்களையும் விடுவித்தவர்களை இதுவரை ஏன் கைது செய்யவில்லை? இதுதொடர்பில் அரசாங்கம் எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை. இந்த கொள்கலன்களை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது தொடர்பில் அரசாங்கம் ஏன் விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கிறது என்பதே எமக்குரிய கேள்வியாகும். அரசாங்கம் ஏன் இந்த விடயங்களை மறைக்கிறது?
எனவே அரரசாங்கம் சுங்க பணிப்பாளருக்கு குற்றச்சாட்டு இருந்தபோதும் பதவி உயர்வு வழங்கியுள்ளதுடன் தற்போது சேவை நீடிப்பும் வழங்கி, அவர் மூலம் எதிர்காலத்தில் இன்னும் உதவிகளை சுங்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

