சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

51 0

இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் பலியான நிலையில் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றனர்.

சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல் | Israel Returns 45 Palestinian Bodies To Gaza

 

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது.

2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சியால் கடந்த மாதம் 10ஆம் திகதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.

மேலும், கொல்லப்பட்ட 28 பணய கைதிகளில் 17 பேரின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. இன்னும் 11 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் உள்ளன.

 

 

சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல் | Israel Returns 45 Palestinian Bodies To Gaza

 

இதனை தொடர்ந்து ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பலஸ்தீனிய சிறைக்கைதிகள் (ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட) பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படு வருகின்றன.

அந்த வகையில் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது.

காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதாரத்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.