நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவுசுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 26-10-2025 ஞாயிறு அன்று அம்ஸ்ரடாம் டீமன் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில்
பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 10.20 மணியளவில் கரப்பந்தாட்டம் ஆரம்பித்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டிகள் வெற்றிபெற்ற வீரர்களிற்கு வெற்றிக் கேடையங்களும் வெற்றிப்பதக்கங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 19.00 மணியளவில் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது. இப் போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்கள்
5பேர்கொண்ட குழுவில்
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
தமிழர் ஒன்றியம் A விளையாட்டக்கழகம்
ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்
வாற்றலோ விளையாட்டுக் கழகம்
4பேர்கொண்ட குழுவில்
முதலாமிடம் தமிழர் ஒன்றியம் A விளையாட்டக்கழகம்
இரண்டாமிடம் தமிழர் ஒன்றியம் A விளையாட்டக்கழகம் மூன்றாமிடம் டைனமைற் விளையாட்டக்கழகம்.










