இலங்கையில், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிலத்தை வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது. 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அல்லது 70 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. ஜெர்மன் முதலீட்டாளர் ஒருவர் இலங்கையில் குத்ததைக்கு நிலத்தை பெற்று முதலீடு செய்யும்போது சங்கடப்படுகிறார். அதாவது தான் நிறைய பணம் முதலீடு செய்ய வேண்டும். இது ஜெர்மனியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, அதை நான் எனக்கு சொந்தமில்லாத நிலத்தில் முதலீடு செய்யவேண்டுமா? என்று ஜேர்மன் முதலீட்டார்கள் எண்ணுகின்றனர் என்று இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமான் தெரிவித்தார்.
பாத்பைன்டர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற வட்டமேசை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் நடுநிலைமை ஜெர்மனிக்குச் சரியானது. இலங்கையின் நிலைப்பாடு ‘அனைவருக்கும் நண்பன், எவருக்கும் எதிரி அல்ல’ என்பது எனக்குத் தெரியும். இதன் பொருள் என்னவென்றால், இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இலங்கை, அனைவருக்கும் நியாயமாக இருக்க முடிவு செய்துள்ளது. எல்லோரும் இந்தக் கடலில் செல்லவும், ஆழ்கடல் துறைமுகங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும், அது நியாயமானது. ஏனெனில், நீங்கள் இந்தத் துறைமுகங்களைப் பராமரிக்கிறீர்கள். ‘இந்த உலகத்தின் ஒரு பகுதி மட்டும், இந்த நாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும், இந்த நாடு அனுமதிக்கப்படாது’ அல்லது ‘எங்களுக்கு இந்த நாட்டுடன் ஒரு பிரச்சனை உள்ளது’ என்ற நிலைப்பாடு இங்கு இல்லை. இலங்கை இதற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அளவிற்குப் புத்திசாலித்தனமாக உள்ளது. இதனையே கடற்பயணச் சுதந்திரம் என்ற சர்வதேசக் கொள்கையும் விரும்புகிறது. அமைதியான கடற்பயணச் சுதந்திரம் என்பது இலங்கையின் நடுநிலைமைக்கு முரண்பாடு அல்ல. அதைப் பேணுவதில் இலங்கை புத்திசாலித்தனமாக உள்ளது.
ஆனால், சில சமயங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கும்போது இலங்கையின் சற்று அதிக ஈடுபாட்டை நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் குறித்த வாக்களிப்பின்போது இலங்கை ஒரு சிறப்பு நடுநிலைமையைக் கடைப்பிடித்தது. நாங்கள் அதை மதிக்கிறோம். அது இலங்கையின் இறையாண்மை முடிவாகும். இருப்பினும், பிராந்திய ஒருமைப்பாட்டை நம்பியிருக்கும் ஒரு சிறிய நாடு என்ற வகையில், இந்த வாக்களிப்பின்போது வேறுவிதமாக வாக்களிப்பது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் இதை எவ்வாறு தொடர வேண்டும் என்பதை இலங்கை முடிவு செய்ய வேண்டும். அது இலங்கையின் கையில் உள்ளது.
இலங்கையுடனான வர்த்தகத்தை பொறுத்தவரையில் 300 க்கும் மேற்பட்ட ஜெர்மன் வர்த்தகப் நாமங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையும் இங்கு ஏதோ ஒரு வகையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
நான் ஜெர்மன் நிறுவனங்களுடன் பேசும்போது, அவர்கள் என்னிடம், “இலங்கையுடனான வர்த்தகம் மேம்பட்டு வருகிறது, ஆனால் அதிகாரத்துவம் (bureaucracy) விரைவாக இருந்தால், ஊழலற்ற கொள்கை தொடரும் என்று நாங்கள் உறுதியாக நம்பினால், எங்கள் முதலீடுகள் பாதுகாக்கப்படும் என்றால், நாங்கள் அதிகமாக முதலீடு செய்யலாம்” என்று கூறுகிறார்கள்.
இலங்கை, உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் போலவே, ஒரு போட்டியில் உள்ளது. உற்பத்தி செய்வதற்கான உரிமம் அல்லது ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கான அனுமதியைப் பெற அவர்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகிறார்கள். இங்கு இலங்கையில், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் நிலத்தை வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது.
30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அல்லது 70 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுப்பது குறித்து நீண்ட கேள்விகள் உள்ளன. ஜெர்மன் முதலீட்டாளர் ஒருவர் இலங்கையிலட குத்ததைக்கு நிலத்தை பெற்று முதலீடு செய்யும்போது சங்கடப்படுகிறார். அதாவது தான் நிறைய பணம் முதலீடு செய்ய வேண்டும். இது ஜெர்மனியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, அதை நான் எனக்கு சொந்தமில்லாத நிலாத்தில் முதலீடு செய்யவேண்டுமா? என்று எண்ணுகிறார்.
ஆனால் இவை அனைத்தும் இலங்கையின் இறையாண்மை முடிவுகள். ஆனால், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் இந்தக் சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன என்பதனை புரிந்துகொள்து அவசியமாகும்.
புதிய தகவல் தொடர்பு மற்றும் உற்பத்தி முறைகள் காரணமாக, ஜெர்மன் நிறுவனங்கள் மட்டுமல்ல, சர்வதேச நிறுவனங்களும், வேறு நாடுகளுக்கு செல்வோம். அங்கு அது எளிதாக இருக்கிறது’ என்று கூறுகின்றன.
மாறாக க்ளீன் சிறிலங்கா திட்டத்தை ஜேர்மன் நிறுவனங்கள் வரவேற்கின்றன. சுத்தமான இலங்கை என்ற நிலைப்பாடு சரியானது, ஆனால் இந்த அனைத்து புதிய கொள்கைகளையும் அதிகாரத்துவத்திற்குள்ளும், சட்டம் இயற்றும் வழிமுறைகளுக்குள்ளும் செயல்படுத்துவது எவ்வளவு விரைவாக இருக்கிறதோ, அவ்வளவு சிறந்தது, அப்போதுதான் அதிக முதலீடுகள் வரும். ஜெர்மன் மக்கள் இலங்கையின் சமூகத்தை விட வயதான சமூகம். உங்களுக்கு வயதாகும்போது, நீங்கள் குறைவாகவே நுகர முடியும், ஏனென்றால் உங்கள் உடல் விரிவான விளையாட்டுகளைச் செய்யவோ அல்லது ஒவ்வொரு நாளும் அதிக உணவு உண்ணவோ உங்களை அனுமதிக்காது. எனவே, நாங்கள் ஏற்றுமதி செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளோம்.
பணம் சுற்றிக் கொண்டிருக்கிறது, அது சாதகமான சூழ்நிலைகளைத் தேடுகிறது. இலங்கைக்கு ஏற்கனவே நிறையச் சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் அதன் நிலை, சட்டத்தின் ஆட்சி பகிரப்பட்ட மதிப்புகள் என்பனவற்றை குறிப்பிடலாம். இந்தக் கொள்கைகளின் அமலாக்கத்தை அது மேம்படுத்த முடியும், அப்போது மேலும் முதலீடுகள் வரும்.

