ரசிகர்களை கவர்ந்த தீபாவளி கவியமர்வு

56 0

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி  தீபத் திருநாளை முன்னிட்டு நடத்திய ஹைக்கூ கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெற்றது. 

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் பொருளாளரும் கொள்கை பரப்புச் செயலாளருமான உஷா கெனடி இந்த  ஐந்தாவது அமர்வுக்கு கவித் தலைமை  ஏற்றிருந்தார்.

புதிய அலை கலை வட்டத்தின்  நிறுவனர்  ராதாமேத்தா  மேற்படி  கவியமர்வின் மற்றொரு  அம்சமாக  “கதை சொல்லுதல்” என்றொரு  நிகழ்வையும் அறிமுகம்  செய்து  வைத்தார். அனைத்து  வயதினரும் இதில் கலந்து கொண்டமைபார்வையாளர்களின்  பெரும்  வரவேற்பைப்  பெற்றது.