சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வாகனம் ஒன்று கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த ஜீப் வாகனமானது போலி ஆவணங்களுடன் இரத்மலானை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஜீப் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

