போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (23) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளில் கணக்குகளைத் திறந்து, இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் வெளிநாட்டில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தைப் புழக்கத்தில் விட்டு, அந்தப் பணத்தை கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பு 13ஐ சேர்ந்த 28 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

