வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை(22) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற காற்சட்டை மற்றும் வெள்ளை மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்ததாகவும், சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

