தெஹிவளையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

46 0

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்லியம் சந்திக்கு அருகில், ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை(13) காலை, கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 01 கிலோகிராம் 95 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பூஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு, மேற்கொண்டு வருகிறது.