நிக்கவெரட்டிய பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை(13) காலை சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனைக்குட்படுத்தியபோதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 771 கிலோகிராம் 50 கிராம் பீடி இலைகள் அடங்கிய 25 பொதிகளும், வாடகை வாகனம் ஒன்றும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தலவில மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடையவர்கள்.
நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

