யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

235 0

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 12, 2025 அன்று டுசில்டோர்ப் நகரத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. முதற்பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட நான்கு மாவீரர்கள் நினைவுகள் சுமந்த இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்படது.

2ம். லெப். மாலதியின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வில் இளையவர்களின் எழுச்சிப் படைப்புகளாக எழுச்சிப் பாடல்கள், கவி நிகழ்வும், எழுச்சி நடனங்களுடன் நினைவுரை, சிறப்புரையும் இடம்பெற்றது. அத்துடன் அனைத்துலக பெண்கள் அமைப்பினால் வெளியீடு செய்யப்பட்ட சூரிய புதல்விகள் பாகம் – 2 இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணை விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளானது (10.10.1987) தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகவும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.