யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்ரர் வாகனத்தை இன்று திங்கட்கிழமை (13) யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னவினவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது பணிப்புரைக்கு அமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.
சம்பவத்தில் வரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

