நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் தோட்டாக்கள்!

49 0

களுத்துறை, மத்துகம, சிறிகந்துர, நாகஹவல பகுதியில் உள்ள சிறிய நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து 94 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கபபட்டுள்ளது.

7.62 x 39 mm ரக தோட்டாக்கள் 6 , 5.56 mm x 45 mm ரக தோட்டாக்கள்  33, போர் 12 ரக தோட்டாக்கள் 2, 7.62 x 51 mm ரக  தோட்டாக்கள் 50, 9 mm ரக தோட்டாக்கள் 2 மற்றும் 38mm ரக தோட்டாக்கள் 2 ஆகியன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்துகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.