போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
“தொட்டலங்க கன்னா” என்பவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து “தொட்டலங்க கன்னா” என்பவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து “தொட்டலங்க கன்னா” என்பவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், “தொட்டலங்க கன்னா” என்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தலைமறைவாக உள்ள “தொட்டலங்க கன்னா” என்பவரை தேடி கண்டுபிடித்து கைதுசெய்து தண்டனைக்குட்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளது.

