மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

38 0

பொலன்னறுவை, வெலிகந்த, ருஹுனகெத பகுதியில் உள்ள காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 முதல் 30 வயதுக்குட்பட்ட 8 அடி உயரமுடைய காட்டு யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட காணியின் உரிமையாளரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வெலிகந்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.