பிராங்பேர்ட் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை 10:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின் வாழ்விற்கும் தம்மை அர்ப்;;பணித்தோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய முத்தகவை நிறைவு விழாச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்களைத் தமிழினத்தின் பண்பாட்டிற்கிசைவாக தமிழாலய இளையோர் சிறப்பாக வரவேற்றனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம், பிராங்பேர்ட் நகர இளையோர் மற்றும் கலாசார மையத்தின் மேலாளர் திருமதி சுசானா ஷாகெற், கலைப் பிரிவுப் பொறுப்பாளர தமிழ மாணி மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, கெசன் மாநிலப் பொறுப்பாளர் திரு. வயிரவநாதன் நிமலன், சார்லாண்ட் மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், பிராங்பேர்ட் கோட்டப் பொறுப்பாளர் திரு. ஆறுமுகம் கனகராசா, பேர்க்ஸ்ராஸ கோட்டப் பொறுப்பாளர் திரு. சின்னத்துரை துரைலிங்கம், தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளர் தமிழ் வாரிதி திரு. நவரட்ணம் நந்தகுமார், தொடக்ககால முன்னாள் தலைமை ஆசிரியரான திரு. சரவணமுத்து பாலச்சந்திரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைக்க அரங்க நிகழ்வுகள் தொடங்கின. அகவணக்கம், தமிழாலயப்பண் என்பனவற்றைத் தொடர்ந்து பிராங்பேர்ட் தமிழாலய நிருவாகி திரு. வைரமுத்து யெகராசா அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
அனைத்துலகப் பொதுத்தேர்வில் யேர்மனிய மட்டத்தில் கடந்த 10 ஆண்டுகள் தமிழாலயத்துக்குப் பெருமை சேர்த்த மாணவர்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் துணைப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் அவர்கள் மதிப்பளித்து வாழ்த்துரை ஆற்றினார். தமிழ்த்திறன் போட்டியில் வெற்றியீட்டித் தமிழாலயத்துக்குப் பெருமைசேர்த்த மாணவர்களுக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளர் திரு. நவரட்ணம் நந்தகுமார் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி ஆகியோர் மதிப்பளித்தனர். அகவை நிறைவு விழாவிற்கான அடித்தளமாய் நின்றுழைத்துவரும் ஆசியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். அதேவேளை இளைய ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பைத் துணைப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் அவர்களை அழைத்து மதிப்பளிக்க வைத்தார்.
கலை நிகழ்வுகள், வாழ்த்துரைகள், மதிப்பளிப்புகள் எனத் தொடர்ந்த விழாவில் முத்துவிழாவினைச் சிறப்பிக்கும் வகையிற் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. பெற்றோர்கள் ஒளியேந்தி அரங்கிற்கு எடுத்து வந்த சிறப்புமலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் துணைப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். லண்டனில் இருந்து வருகைதந்த முன்னாள் தலைமை ஆசிரியரரான திரு. சரவணமுத்து பாலச்சந்திரன் அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றினார். கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியீட்டுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் மற்றும் தமிழாலயப் பெற்றோருக்கும் நிருவாகியால் சிறப்புமலர் வழங்கப்பட்டது.
முன்னாள் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பை முன்னாள் தலைமை ஆசிரியரான திரு. சரவணமுத்து பாலச்சந்திரன் அவர்கள் வழங்கிவைத்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிவீந்திரநாதன் அவர்கள்; சிறப்புரையாற்றினார். நிறைவாகத் தமிழாலய மாணவர்களுக்கான நினைவு மதிப்பளிப்பு அவர்களது வகுப்பாசிரியர்களினால் வழங்கப்பட்டது.
அயல் தமிழாயங்களின் நிருவாகிகள்;, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பியர் ஆகியோர் கலந்தகொண்ட 30ஆவது அகவைப் பெருவிழா தமிழரின் தாகத்தைச் சுமந்த ஈகையரின் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையோடு 19:00 மணிக்கு நிறைவுற்றது.









































































































