அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 60 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு ரைபிள் வகைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புறநகர்ப் பகுதியான குராய்டன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி இரவு 7:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை சந்தேகநபர் துப்பாக்கியால் “50 முதல் 100 முறை சுட்டிருக்கக்கூடும்” என நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் கண்காணிப்பாளர் ஸ்டீபன் பாரி தெரிவித்துள்ளார்.

