தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவளை ரயில் நிலையம் அருகே, கொலை முயற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த, சந்தேக நபர் குறித்து, கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
அதன்படி, கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளுக்கமைய, தெஹிவளை பஸ் நிலையத்திற்கு அருகில், வெள்ளிக்கிழமை(03) சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பின்னர், சந்தேக நபரை கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை, சீவலி வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

