தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு சிறுவன் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 22ஆம் திகதி, அப்பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு லொறிகளில் பெருமளவு ஐஸ் மற்றும் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஐந்து சந்தேகநபர்களும் 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டனர். சிறுவன் நன்னடத்தையில் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் விளக்கமறியலில் உள்ளனர்.
இதற்கிடையில், கடலில் இருந்து போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகின் உரிமையாளரும், ஹெரோயின் வைத்திருந்த 54 வயதுடைய பெலியத்தவைச் சேர்ந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

