ஜேர்மன் நகரமொன்றில் வீடொன்றில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்

42 0

ஜேர்மன் நகரமான மியூனிக்கில், தனது பெற்றோர்கள் வீட்டுக்குத் தீவைத்த நபர் ஒருவர், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்

மியூனிக் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்த ஒருவர், நேற்று தனது பெற்றோர்கள் வீட்டில் வெடிகுண்டுகளைக் கட்டிவைத்து, வீட்டுக்குத் தீவைத்துள்ளார்.

 

 

பின்னர், அவர் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தகவலறிந்து அந்த இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்த பொலிசார், வீட்டுக்குள் உயிரற்ற நிலையில் ஒருவரையும், துப்பாக்கிக்குண்டு பாய்ந்த காயங்களுடன் ஒருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில் அங்கு ஏராளம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் அந்த வீட்டுக்குச் செல்லும்போது ஒரு முதுகுப்பையைக் கொண்டு சென்றதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, அந்தப் பையில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்துள்ளார்கள்.

எதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது, எதற்காக அந்த நபர் தனது பெற்றோர் வீட்டுக்குள் வெடிகுண்டுகளைக் கட்டி வைத்தார், துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார் என்பது போன்ற விடயங்களை அறியும் நோக்கில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.