உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் இன்று பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்யாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்யாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம். ரிசாட், பிரதி அதிபர் எம்.ஆர்.ஏ. முனாப் மௌலவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், ஊர்வலமாக சென்ற மாணவர்கள் “எங்களைத் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்”, “எங்கள் நாடு எங்கள் கைகளில்”, “கல்வி என்பது கண்களைத் திறக்கும்”, “இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்” என்பன போன்ற சுலோகங்களை ஏந்தி, பொதுச் சந்தை ஊடாக நகரைச் சுற்றி வந்தனர்.
இதன் போது, அம்மாணவர்களுக்கு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பால் பெக்கெட்டுகளை வழங்கி, உற்சாகம் ஊட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

