கொழும்பு நீச்சல் கழகத்திற்கு (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது மகன் கொழும்பு நீச்சல் கழகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது எனது மகன் நீச்சல் தடாகத்தில் விளையாடியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து எனது மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வைத்திய பரிசோதனையில் மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
மகனுக்கு எவ்வளவு நேரம் ஒட்சிசன் வழங்கப்பட்டது, அம்புலன்ஸ் எப்போது வந்தது என வைத்தியர்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை.
ஏனென்றால், கொழும்பு நீச்சல் கழகத்தின் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை எங்களிடம் வழங்கவில்லை. அவர்களிடம் சிசிடிவி கமராக்களும் இல்லை.
எனது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டமைக்கு கொழும்பு நீச்சல் கழகத்தின் கவனக்குறைவே காரணம்.
எனவே நான் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தேன்.
எனது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

