தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையின் மருத்துவ பணி இடமாற்றம் தொடர்பாக தற்போதைய நிலைமையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஏற்கனவே நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் துணை இயக்குநர் (விசாரணை) தாரக திசாநாயக்க மற்றும் இயக்குநர் (முதன்மை சுகாதார சேவைகள்) டாக்டர் டபிள்யூ. கே. டபிள்யூ. சரத்சந்திர குமாரவன்ச ஆகியோர் குழுவின் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சின் உதவிச் செயலாளர் (அவசர சோதனைகள்) எச். பி. பி. ஜெயவிக்ரம, விசாரணை அதிகாரி கே. எம். டி. எல். அமரதுங்க ஆகியோர் இந்த குழுவில் அடங்குகிறார்கள்.
தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

