கிளங்கன் வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவுக்கு வாங்கு கதிரைகள் வழங்கி வைப்பு

38 0

 

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கும் மற்றும் கிளினிக் சேவைகளுக்கு வருகை தருவோரின் நலன் கருதியும் அட்டன் லயன்ஸ் கழகத்தினர்  ஒரு தொகை வாங்கு கதிரைகளை வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தனர்.

இந்நிகழ்வு கிளங்கன் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பஸீல் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டன் லயன்ஸ் கழகத் தலைவர்  எஸ்.சப்பாணி,  செயலாளர் நல்லுசாமி , லயன் பிரபாகர் உட்பட கிளங்கன் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சங்கரமணிவண்ணன், பொருளாளர் பி.நாகேந்திரன் மற்றும் வைத்தியர் அருள்குமரன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.