கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க வீதம், 2025 ஓகஸ்ட் மாதத்தில் 1.2 சதவீததத்தில் இருந்ததிலிருந்து 2025 செப்டம்பரில் 1.5 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது என தொகை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்துக்குரிய கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உணவுப் பணவீக்க வீதம் 2025 ஓகஸ்ட் மாதத்தில் 2.0 சதவீதத்துடன் ஒப்பிடும்போது,2025 செப்டம்பரில் 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.. செப்டம்பரில் உணவு அல்லாத ஆண்டு பணவீக்கம் 0.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2025 ஓகஸ்ட் மாதத்தில் 0.8சதவீதமாக பதிவாகி உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

