உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

47 0

உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அழிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் பலருடனும் மிகவும் பண்பாக பழகும் ஒரு மாணவனான இவனது இழப்பு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.