வருடாந்தம் இரண்டு சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க கௌரவமான, அமெரிக்க கடற்படை முதுமாணிக் கல்லூரியின் சிறந்த சர்வதேச மாணவர் விருதினைப் பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படையினைச் சேர்ந்த LCDR கத்ரிஆரச்சிகே கத்ரிஆரச்சிக்கு எமது வாழ்த்துக்களை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
LCDR கத்ரிஆரச்சியின் வெற்றியானது இலங்கை கடற்படையின் மீது ஒரு வெளிச்சத்தினைப் பாய்ச்சுகிறது. இது இலங்கைக்கு ஒரு பெருமையான தருணமாகவும், எமது பகிரப்பட்ட இந்தோ-பசிபிக் கடல்சார் பங்காண்மைக்கான ஒரு உந்து சக்தியாகவும் அமைகிறது என தெரிவித்துள்ளது.

