கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வழக்கின் அசல் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு, வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டது.
வழக்கு இன்று (26) வௌ்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

