ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றுதமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“எதிரணிகள் ஒன்றிணைவதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் அதனைச் செய்ய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.
தவறிழைக்கப்பட்டால் நிச்சயம் அவற்றை எதிர்ப்போம். மக்கள் வாக்களிக்கும் வரை அரசியலில் ஈடுபடும் எண்ணத்துடன்தான் இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

