மீரிகம வாகன விபத்தில் பாடசாலை மாணவி பலி!

47 0

மீரிகம பொலிஸ் பிரிவில் உள்ள பஸ்யால கிரிஉல்ல வீதியில் உள்ள டி.எஸ். சந்திக்கு அருகில் வலதுபுறம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 23) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் பலத்த காயமடைந்து மீரிகம  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் குறித்த வாகனத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நவகமுவ, நிட்டம்புவவைச் சேர்ந்த 17 வயது பாடசாலை  மாணவி ஆவார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.