கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத் திரும்பவில்லை என செப்டம்பர் 21ஆம் திகதியன்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செப்டம்பர் 22ஆம் திகதி (நேற்று) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
காணாமல் போனவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

