மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழில்துறை மற்றும் திருக்குறள் இருக்கை ஒருங்கிணைப்பின்கீழ், மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் இணைந்து அற இலக்கியங்கள் பன்முகப் பார்வை-அயலக மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் கடந்த 28.06.2025 ஆம் திகதி முதல் 08.09.2025 ஆம் திகதி வரை 14 நாட்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக மாளவியா மிஷன் பயிற்சி மையத்தில் தொடங்கியது.
இப் பன்னாட்டுப் பயிலரங்கத் தொடக்க விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தனி அதிகாரி பேராசிரியர் அ.வேளாங்கண்ணி ஜோசப் தலைமை தாங்கினார்.
நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல்துறைத் தலைவரும் திருக்குறள் இருக்கையின் இயக்குநர் பொறுப்பாளரும் இப்பன்னாட்டுப் பயிலரங்கின் முதன்மை ஒருங்கிணைப்பு செயலாளருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்றார்.
மலேசியா சுல்தானி இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கார்த்திகேசு பொன்னையா கருத்தரங்க நோக்க உரையாற்றினார்.
நிகழ்வில் இந்திய மொழிகள் நடுவன் நிறுவனத்தின் மேனாள் தரவக மேம்பாட்டு இயக்குனர் பேராசிரியர் எல்.ராமமூர்த்தி பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க உரை நிகழ்த்தினார்.
பன்னாட்டு கருத்தரங்கில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மலேசியா சுல்தான் இடரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மூத்த விரிவுரையாளர் முனைவர் பிரான்குளின் தம்பி ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக சுல்தான் இடரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மூத்த விரிவுரையாளர் முனைவர் இளங்குமரன் சிவநாதன் நன்றி உரை ஆற்றினார்.
இத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் மலேசியா நாட்டில் உள்ள சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடம் படிக்கின்ற தமிழ்த்துறை செல்வன். ஜீவநாத் பிரகாஷ், செல்வி. யாஸ்வினி மோகன் காந்தி,செல்வி. கீர்த்திகா லோகநாதன், செல்வி. சத்தியமலர் பரமசிவன், செல்வி. ஹம்சலெட்சுமி தமிழரசன், செல்வி. குகனேஸ்வரி சாரங்கன் , செல்வன். யுவராஜ் ஆறுமுகம், செல்வி. நிரோஷா மோகன், செல்வி. ஜீவித்திரா சசிவர்ணம், செல்வி. அஸ்வினிதேவி ஆனந்தராவ், செல்வி. மாலினி தியாகராஜன், செல்வி. லெச்சுமி சுப்ரமணியம், செல்வன். அன்பரசன் முனியாண்டி, செல்வி. பவதாரணி முரளி, செல்வி. மௌன ஸ்ரீ தனம் விஜயன், செல்வி. கேசினி இராஜேந்திரன், செல்வன். தமிழ் அமுதன் ஆறுமுகம், செல்வன். கலையரசன் ஆறுமுகம், செல்வி. பிரியங்கா வடிவேல், செல்வி. அனுசியா முருகையா, செல்வி. விசாலினி மூர்த்தி, செல்வி. ஜெக்லின் அந்தோணிசாமி, செல்வி. கிஷாலினி சுதாகரன் மாணவ, மாணவியர்கள் 24 பேரும் ஆசிரியர்கள் 3 பேரும் ஆகமொத்தம் 26 பேர் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு அற இலக்கியம் சார்ந்த நூல்கள் உணர்த்தும் கருத்துக்களைச் சிறந்த கல்வியாளர்களைக்கொண்டு கற்பித்ததோடு, தமிழ்ப் பண்பாடு சார்ந்த கீழடி, கீழக்குயில்குடி சமணர் பண்பாட்டுத் தளங்கள், கன்னியாகுமரி விவேகனந்தர் பாறை, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள், விவசாய இடங்கள், பண்பாட்டுக் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தலங்களையும் அதன் சிறப்புக்களையும் எடுத்துரைக்கப்பட்டது.
பதினான்கு நாள் இப்பன்னாட்டுப் பயிலரங்கின் நிறைவு விழா இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழக மாளவியா மிஷன் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தேர்வாணையர் முனைவர் ச.முத்தையா தலைமை வகித்தார்.
நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத தமிழியல்துறைத் தலைவரும் திருக்குறள் இருக்கையின் இயக்குநர் பொறுப்பாளரும் இப்பன்னாட்டுப் பயிலரங்கின் முதன்மை ஒருங்கிணைப்பு செயலாளருமான முனைவர் போ சத்தியமூர்த்தி வரவேற்றார்.
நிறைவு விழா நிகழ்வில் தேனி, குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளையின் நிறுவுனர் முனைவர் தி.இராஜேந்திரன் ஆசியுரை வழங்கினர். பின்னர் மலேசியா சுல்தானி இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கார்த்திகேசு பொன்னையா முனைவர் இளங்குமரன் சிவநாதன் மற்றும் மாணவர்கள் ஆகியோர் 14 நாட்கள் நடைபெற்ற பன்னாட்டுப் பயிலரங்கத்தின் கருத்துரை வழங்கினர்.
நிகழ்வில் மைசூர், இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் மேனாள் துணை இயக்குனர் பேராசிரியர் ந.நடராஜப்பிள்ளை, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் மொழியியல்துறை தலைவரும் ஆட்சி குழு உறுப்பினருமான பேராசிரியர் தி. முத்துகிருஷ்ணன, மயிலம். ஸ்ரீமத் பாளைய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். சு. திருநாவுக்கரசு, தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், வி.ஜி. ரமேஷ் குமார் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் தஞ்சை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர், கி.கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 14 நாள் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத மாளவியா மிஷன் பயிற்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர். மு.சிவக்குமார். பேராசிரியர் அ.வேளாங்கண்ணி ஜோசப்இஎஸ்.கோட்டைப்பட்டி பராசக்திகல்வியியல் கல்லுரியின் தாளாளர் முனைவர் மு.ஜெகதீசன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள்,அலுவலர்கள் கலந்துகொண்டன். நிறைவாக மலேசியா சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் முனைவர் பிராங்குளின் தம்பி ஜோஸ் நன்றி கூறினார்.



