பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்காக பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் !

54 0

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் போக்குவரத்து உரிமத்தை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உரிமத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுப் போக்குவரத்து சாரதிகள் உரிமத்தைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இப்போது ஆசன பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பஸ்கள் தயாரிக்கப்பட்டபோது ஆசன பட்டிகள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் பஸ்களில் ஆசன பட்டிகள் பொருத்த முடியாதபடி மாற்றியமைக்க முடியும். இப்போது அவர்கள் என்னையும் பொலிஸையும் ஏமாற்ற தங்கள் குழந்தைகளின் பாடசாலை பைகளில் உள்ள பட்டிகளை அணிந்துள்ளனர்.

இந்த மக்களிடம் 50 பேரை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. தீவிரமானவர்கள் பொதுப் போக்குவரத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எனவே, மக்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதி உரிமத்தை பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இப்போது நாங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளோம்,

அதற்கமைய, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் போக்குவரத்து உரிமத்தை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.