வாதுவ பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற இரண்டு வெளிநாட்டினர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணத்தை அதிக பணமாக மாற்றித் தருவதாக கூறி நூதன முறையில் பணத்தை திருடியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொட்பாக பாரவூர்தியின் சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

