கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

59 0

கொழும்பில் வியாழக்கிழமை (18)  முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த 9 மணிநேர நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) இன்று அறிவித்துள்ளது.

காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தண்ணீர் வெட்டு திட்டமிடப்பட்டது.

கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை இந்த தண்ணீர்​ வெட்டு அமுல்படுத்தப்படுமென முன்​னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் மட்டுமன்றி கொழும்புக்கு வெளியே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச்., கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, முல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, ஒருகொடவத்தை தெஹிவளை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.