யேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

107 0

அன்பார்ந்த யேர்மனிய வாழ் தமிழீழ மக்களே,
எமது தாயக விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் எமது மண்ணிலே விதைந்தார்கள். அம்மாவீரர்களின் உயிர் கருவாகி, வரலாற்றுத் தாயின் மடியில் உருவம் பெற்று, தமிழீழ தேசமாக வடிவம் பெறும்.
ஆம் உறவுகளே,
தமிழீழ தேசத்தின் உயிராக, உன்னத வடிவமாக தியாக தீபம் திலீபன் அவர்களும் விளங்குகின்றார். உலகின் அமைதிவழிப் போராட்ட வரலாற்றின் உச்சமாக, நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 38ஆம் ஆண்டு நினைவுகள் எமது மனங்களில் ஒளியேற்றி நிற்கின்றது. செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடங்கி 26ஆம் திகதி வரையான பன்னிரு தவத்திரு நாட்களையும் நினைவு கூருவதோடு, யேர்மனிய மக்களுக்கும் இங்கே வாழும் பல்வேறு தேசிய இனமக்களுக்கும் தியாக தீபம் திலீபன் அவர்களது உன்னத தியாகத்தினையும், அவரது இலட்சியக் கனவுகளையும் கொண்டு சேர்ப்பது ஈழத்தமிழராகிய எம் ஒவ்வொருவரது உரிமையும் கடமையும் ஆகும்.

யேர்மனியின் பல்வேறு நகரமத்திகளில் எம்மால் ஒழுங்குபடுத்தப்படும் நினைவெழுச்சி நிகழ்வுகளிலும், பரப்புரைக் கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் பேரெழுச்சியோடு ஒன்றிணையுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிறீலங்கா சிங்கள இனவெறி அரசுகளால், தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பானது இன்றும்
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான சிங்கள இனவெறி அரசினால் ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளாக தீவிரமடைந்துள்ளது.

தமிழர்களது பூர்வீகத் தாயகமான தமிழீழப்பகுதிகளின் தொன்மை வாய்ந்த தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள-பெளத்த மயமாக்கலினூடாக நிலப்பறிப்பு ஒருபுறமாகவும், இனக்கலப்பினூடாக திட்டமிட்ட இன அழிப்பு இன்னொருபுறமாகவும் மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.