அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார்.
இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், வெள்ளை மாளிகைக்கான வர்த்தக ஆலோசகர் பீடடர் நவோராவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்தியாவை வரி மகாராஜா எனக் கூறியிருந்தார்.இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருக்கிறேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இருதரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தைக்கான பணிகளி வளர்ந்து கொண்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அது அவர்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை இந்தியா- அமெரிக்கா இடையிலான் Fast-Track பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதை இந்தியாவுக்கான பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் “இந்தியா- அமெரிக்கா fast-track வர்த்த பேச்சுவார்தை நடத்தும் ” எனத் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நாளை ஒருநாள் பயணமாக வர்த்தக ஒப்பந்த ஆலோசனைக்காக இந்தியா வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

