இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காசா நகர மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
காசாவில் உள்ள மிக உயரமான குடியிருப்பு கட்டிடமான அல்-காஃப்ரி கட்டிடத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்துள்ளது.
காசா நகரத்தின் மீது நேற்று மாலை பாரிய தாக்குதல்களை நடத்தியதால், இலட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விதிவிலக்காக தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் நகரின் வடக்கு மற்றும் மேற்கில் குவிந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் நகரத்தைக் கைப்பற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் அண்மையில் சுமார் 50 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெய்டவுனில், ஒகஸ்ட் தொடக்கத்தில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் அதன் 23 மாத இனப்படுகொலைப் போரின் போது குடியிருப்புப் பகுதிகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மீண்டும் தாக்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காசா நகரில் ஆறு வயது இரட்டையர்கள் உட்பட 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

