கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன

82 0

கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன . உரிய காலப்பகுதிக்குள் அப்பணிகளை நிறைவுசெய்ய தவரியதால், சுமார் 29 பில்லியன் ரூபா பணத்தை மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மொரட்டுவை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டை சேர்ந்த 100 மருத்துவ மாணவர்களுக்கான பேராசிரியர் வழிமுறை பயிற்சிகள் திங்கட்கிழமை (15) களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட அமைச்சர் உரையாற்றுகையில்,

2017 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மொரட்டுவை மற்றும் ஊவா வெல்லஸ்ஸ ஆகிய பல்கலைக்கழகங்களுக்கான மருத்துவ பீடம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க களுத்துறை நாகொட வைத்தியசாலையை வழங்குமாறு கோரியும் தனிநபர் பிரேணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தேன். அப்போதைய ஆட்சியாளர்களின் பிரேதேச ரீதியான தீர்மானங்களினால் அதை சாத்தியப்படுத்துவது சிரமமான காரியமாக இருந்தது.

இந்நாட்டின் மருத்துவக் கல்வியின் தேசிய தேவைக்கு அவை பொருந்தாது என அலட்சியப்படுத்தினர். எனினும் எமது அரசாங்கத்தால் மொரட்டுவை பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டுமானப் பணி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்கு அவசியமான நிதியை வழங்குவதற்கான நடவடிக்கையும் துரிதமாக முன்னெடுக்கப்படும். வைத்திய ஊழியர்களுக்கான பற்றாக்குறையால் சிகிச்சை சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள கல்அஸ்ஸ மகப்பேற்று மருத்துவமனையின் தேவைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். அரசாங்கத்தால் அவ்வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றை நிறுவுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

நாகொட வைத்தியசாலையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வைத்திய பிரிவு , தாதியர் பாடசாலை கட்டிட நிர்மாணப் பணிகள் ஆகியன 2027 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும். இதற்காக 45 பில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன. உரிய காலப்பகுதிக்குள் அப்பணிகளை நிறைவுசெய்ய தவரியதால் தற்போது அந்த திட்டங்களுக்காக சுமார் 29 பில்லியன் ரூபா பணத்தை மேலதிகமாக செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றார்.