தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்காக 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைக்காக அனுமதி அட்டை விநியோகம் இன்று (15) முதல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்லைன் மூலம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கு பின்வரும் தகமைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி 18 முதல் 39 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் ((1985.09.15 முதல் 2007.09.14 வரை பிறந்த) நபர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கின் காரணமாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது கடுமையான தண்டனை பெற்றவராக இருத்தல் கூடாது.
கொரிய குடியரசால் நாடுகடத்தப்பட்டவராக அல்லது திருப்பி அனுப்பப்பட்டவராக இருத்தல் கூடாது.
பார்வை குறைபாடு அல்லது நிறக்குறைபாடு இல்லாத நபராக இருக்க வேண்டும்.
முதுகுத் தண்டு காயம் உள்ளவராகவோ அல்லது விரல்கள் இல்லாதவராகவோ அல்லது விரல்கள் அகற்றப்பட்டவராகவே இருத்தல் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக அறிவுறுத்தல்களை பெற்று விண்ணப்பிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் https://services.slbfe.lk/KoreanData/Index_ConfirmConsent க்கு பிரவேசியுங்கள்.

