திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமையேற்பு

65 0

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க திங்கட்கிழமை (15) அன்று உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார்.

குருநாகல் டிங்கிரியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பல நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.

மத அனுஷ்டானங்களுடன் இடம் பெற்ற குறித்த கடமை பொறுப்பேற்பின் போது சர்வமதத் தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள் ,உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.