தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து தங்கள் நிலைப்பாட்டை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை ரூ.1700 ஆக உயர்த்த வேண்டும் என்று தோட்ட உரிமையாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
தற்போது, ஒரு தோட்டத் தொழிலாளியின் நாளாந்த ஊதியம் ரூ.1350 ஆகும்.

